கள்ளக்குறிச்சி: தஆரம்ப Bமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர். சி. ஹெச் தூய்மை பணியாளர்கள் சங்கம் மற்றும்
M. P. H. W. பணியாளர்கள் சங்கத்தின மாநில தலைவர் செல்வராஜ் அவர்கள்
தமிழக முதல்வருக்கு தனது அறிக்கையில் தெரிவித்த வேண்டுகோள்,
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்,
கள்ளச்சாராயம் (விஷ சாராயம்) குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பத்து லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணியின்போது இறந்து போனால் அவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி கிடையாது ஏனெனில்
இறந்து போனவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்றும் அவர்களுக்கு நிரந்தர அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் கிடையாதா,
இது எப்படி நியாயமாகும் இதுதான் திராவிட மாடலா?
அனைவரையும் இம்மாநில மக்கள் என கருதுங்கள், இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதே,
அதேபோல நிவாரணம் என்பதும்
அனைவருக்கும் பொதுவானதே,
தேவையை ஆய்வு செய்து தகுதி உள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும்
அது தான் திராவிட மாடல் என்று கூறினார்.