விழுப்புரம்:தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கும் முறையை கைவிட வேண்டும்,
மாத ஊதியம் வழங்கிட வேண்டும்,
பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்,
ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு வேண்டும் என்றும்
மேலும் இது குறித்து இச்சங்கத்தின் கௌரவத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 38.000 பேர் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் கீழ் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள்.
கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற நோய்களை தடுத்திட,
கொசுப்புழு ஒழிப்பு பணிகள். மருந்து அடித்தல் போன்ற பணிகளையும் செய்து வருகிறார்கள்.
இவை தவிர, பன்றிக்காய்ச்சல்
அனைத்து விதமான வைரஸ் காய்ச்சல் தடுப்பு ,டைபாய்டு, காலரா, வாந்தி, பேதி போன்ற நீரினால் பரவும் நோய்கள் தடுப்பு, அம்மை நோய்கள் தடுப்பு, புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற
பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் முன்களப் பணியாளர்களாக அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனர்.
தமிழக அரசு நிர்ணயத்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் , மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.
DBC ஊழியர்களுக்கு தினக் கூலி
மிகவும் குறைவாக 300 ரூபாய் 350 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அகவிலைப்படி வழங்கப்படுவதே இல்லை .
நாமக்கல் ,பெண்ணாகரம் போன்ற சில இடங்களில் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக இந்த ஊதிய பாக்கியை வழங்கிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி ,நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பணி செய்யும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தமிழக அரசின் குறைந்தபட்ச ஊதிய வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட 2017 ஆணையின்படி வழங்கிட வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு உரிய ஊதியம் சில இடங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அவ்வாறு வழங்கப்பட வேண்டும்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக , 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணய ஆணையை நடைமுறைப் படுத்த வேண்டும்.
கொசு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு ( DBC workers ) குறைந்தபட்ச தினக் கூலி சட்டத்தின் படி , அரசாணை 2D எண் 62 தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள் 11-10-2017 ன் படி, (Semi Skilled Grade I) ஆக வரையறுக்கப்பட்ட அடிப்படையில்
நகராட்சிகளில் ரூ 19503 ம் , மாநகராட்சிகளில் ரூ 21503ம் பேரூராட்சிகளில் ரூ 17503ம் ஊராட்சிகளில் ரூ15503ம் தினக் கூலி வழங்கிட வேண்டும்.
தினக் கூலித் தொடர்பான அரசாணையை மேலும் கால தாமதமின்றி நடைமுறைப் படுத்திட வேண்டும்.
அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்க வேண்டும்.
கொசு ஒழிப்புப் பணியாளர்களை கொசு ஒழிப்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
DBC பணியாளர்கள் அவர்களுக்குரிய பணி அல்லாத வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும்.
உள்ளூர் பிரமுகர்கள் ,கவுன்சிலர்கள்,உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகள்,தோட்ட வேலைகள்,சமையல் வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தடுத்திட வேண்டும்.
DBC பணியாளர்களுக்கு
வீட்டு வரி, தண்ணீர் வரி,தொழில் வரி போன்ற வரிகளை வசூல் செய்யும் வேலைகளை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
தூய்மை இந்தியா திட்டத்தில் பணி செய்ய வேண்டியவர்களுடைய பணியை DBC பணியாளர்களுக்கு வழங்க கூடாது.
இதனால் இவர்கள் செய்ய வேண்டிய கொசுப்புழு ஒழிப்பு பணி கடுமையாக பாதிக்கப்படுவதால் டெங்கு ,மலேரியா போன்ற காய்ச்சல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதனால்
பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தடுப்புத்துறை மூலம் நோய்களைத் தடுப்பதில் தொய்வு ஏற்படுகிறது.
சில இடங்களில்
உயர் பொறுப்பில் உள்ளவர்கள் , கவுன்சிலர்கள்,இப்பணியாளர்களை தொடர்ந்து ஊதியமில்லாத வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்துவது , ஊதியத்தில் கமிஷன் தர வற்புறுத்துவது மீறினால்,பணி நீக்கம் செய்து விடுவேன் என்று மிரட்டுவது, பணி நீக்கம் செய்வது, போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
தமிழக அரசின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார்கள்.
உடனடியாக இதுபோன்ற
தொழிலாளர் விரோத
நடவடிக்கைகளைதடுத்து நிறுத்திட வேண்டும் .
கடலூர் மாநகராட்சி போன்ற சில இடங்களில் இப்பணியாளர்கள் அதிக தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
பல இடங்களில் டிபிசி கொசு ஒழிப்புப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இது போன்ற பணி நீக்கங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இப்பணியாளர்களுக்கு, உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும்.
DBC பணியாளர்களின் பணி நீக்கங்களை கைவிட வேண்டும்
இவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
கொசு ஒழிப்புப் பணியாளர்களை பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணி அமர்த்துவதை கைவிட்டு, இவர்களின் பணிக்கு பொருத்தமான மருத்துவ துறையின் கீழ் மட்டுமே பணியமர்த்திட வேண்டும்.
இப்பணியாளர்கள் அனைவரையும் மருத்துவத்துறை பணியாளர்களாக, நோய்த்தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.
DBC பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கும் முறையை கைவிட்டு மாத ஊதியம் வழங்கிட வேண்டும்.
ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும்.
தமிழக அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் .
மாறாக சுய உதவிக் குழுக்கள் மூலமாக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணி செய்வதாக கணக்கு காண்பித்து , அவர்கள் மூலமாக ஊதியம் தரப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மருத்துவ துறையின் மூலமாகவே இப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்.
DBC பணியாளர்களுக்கும்,பொது சுகாதாரத் துறையில் தற்காலிகமாக பணிபுரிபவர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான புதிய பணியிடங்களை உருவாக்கி அவ்விடங்களில் நிரந்தர பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
தமிழக அரசு 2642 மருத்துவர்களை பணி நியமனம் செய்து ,அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முயன்றமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த சங்கத்தை AITUC தொழிற்சங்கத்துடன் இணைத்துக் கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில்
தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளரும் ,
தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவருமான
டாக்டர் ஏ.ஆர்.சாந்தி , ஏ.ஐ.டி.யூ.சி விழுப்புரம் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஏ. சௌரிராஜன் தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. ஜெயவேல் ,
மாநில பொதுச் செயலாளர் ஏ.
சதீஸ் ,பொருளாளர் க.பூமிநாதன்,
மாநில துணைச் செயலாளர் மா.செந்தில் குமார்
உள்ளிட்ட மாநில ,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.