தமிழ் உணவு பாதுகாப்பு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவால் பழிவாங்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்:மாநில ஆணையருக்கு வேண்டுகோள்!
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு. டி.அனுராதா அவர்களின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், அவரால் பழிவாங்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் சி.சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் எமது சங்கத்தின் சார்பில், நமது ஆணையரகம் முன்பாக 10.08.23 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தங்களை சந்தித்து சி.சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினோம்.
இந்நிலையில் காணொளி காட்சி வழியாக எமது சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் திரு. மு.சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவை ஏகமனதாக எடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு டி.அனுராதா அவர்களால் பழிவாங்கப்பட்டு ள்ள சி.சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவை மாநில ஆணையர் உடன் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தொடர் விடுமுறை மற்றும் நிர்வாக காரணங்களால் ஏற்படும் நியாயமான காரணங்கள் உள்ளிட்டவற்றை பரிசீலனை செய்து, எதிர்வரும் 18.08.23 வெள்ளிக்கிழமை-க்குள் மேற்படி தற்காலிக பணிநீக்க உத்தரவு ரத்தாகவில்லை என்றால், 21.08.23 முதல் மாநில ஆணையரகத்தில் எமது சங்க மாநில நிர்வாகிகள் ஆணை வழங்கப்படும்வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஏகமனதாக முடிவு செய்கின்றோம் “*
எனவே மாநில ஆணையர் அவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மு.சி.முருகேசன்,
மாநிலத் தலைவர்
மற்றும்
அ.தி.அன்பழகன்,
பொதுச்செயலாளர்
தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம்