எஸ் .ஆர் .எம் .பி ஆர் குழுமத்தின் சென்னை எழும்பூர் முதல் சீரடி வரை முதல் ரயில் சேவை தொடக்கம்
சீரடிக்கு செல்லும் ரயில் சேவையை டாக்டர் பாரிவேந்தர் எம் பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எழும்பூர்:சென்னை முதல் சீரடிக்கு எஸ். ஆர்.எம்.பி.ஆர் குளோபல் ரயில்வேஸ் சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து சீரடிக்கு செல்லும் முதல் ரயில் சேவையை டாக்டர் பாரிவேந்தர் எம் பி, எஸ் ஆர் எம் குழு சேர்மன் ரவி பச்சமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஐ.ஜே.கே கட்சியின் தலைவரும் எஸ்.ஆர்.எம் குழும நிறுவனரும மான பெரம்பலூர் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.எம் குழும சேர்மன் ரவி பச்சமுத்து முன்னிலை வகித்தார். தொடர்ந்து தென்னக ரயில்வே வர்த்தக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.ஆர்.எம்.பி .ஆர் குழுமத்தின் முதல் ரயில் சேவையான ரயிலுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் ரயிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் எஸ் ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் ரவி பச்ச முத்து மலர்த்தூவியும், கொடிய அசைத்தும் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் கூறியதாவது:
எஸ்.ஆர்.எம் .பி.ஆர்.எஸ் குளோபல் ரயில் சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது
எஸ்.ஆர்.எம் குழுமம் பல துறைகளில் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது என அனைவரும் அறிவீர்கள், அந்த வகையில் தமிழ்நாடு இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மிகச் சிறப்பாக பெயரையும் புகழையும் பெற்று தருகிற வகையில் செயல்பாடு இருக்கிறது மற்றும் இருந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த எஸ்.ஆர்.எம் ஆம்னி பஸ் சேவைகள் மீண்டும் துவக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்
இந்த நேரத்தில் அதன் தொடர்ச்சியாக இந்திய அரசு பாரத் கௌரவ் ட்ரெயின் என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கும் ரயில் சேவை கொடுப்பதற்காக முடிவெடுத்து விண்ணப்பித்த நிலையில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் அனுபவத்தின் அடிப்படையில் மத்திய அரசு தங்களுக்கு ரயில் சேவையை நடத்த வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் ரயில்வே என்பது தமிழ்நாட்டில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்களை கொண்டு செல்ல முயற்சியில் ஈடுபட்டு ரயில்வே போர்டு எஸ்ஆர்எம் குடும்பத்திற்கு நான்கு ரயில்களை கொடுத்துள்ளது
அதன் முதல் ரயில் இன்று சென்னையிலிருந்து சீரடிக்கு செல்கிறது, மற்ற ரயில் வண்டிகளும் கன்னியாகுமரி போன்று பல தலங்களுக்கு செல்ல உள்ளது
நாங்கள் செய்யும் பல தொழில்களில் இதுவும் ஒன்றாய் ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் இந்த குழுமம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் , தமிழ்நாடு மக்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை நிறுவியுள்ளோம் இனிமேல் எந்த ஒரு தளத்திற்கும் இந்த ரயிலில் பதிவு செய்து பயணிக்கலாம்.
இந்த ரயிலின் சிறப்பாக பயணிக்கும் மக்களுக்கு தங்குவதற்கு இட வசதி உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்துள்ளனர், யார் யார் எந்தெந்த பெட்டியில் பதிவு செய்துள்ளனரோ அதற்குத் தகுந்தார் போல் அவர்களுக்கு சிறப்பாக பணிவிடை செய்யப்படும் என தெரிவித்தார்
எங்கள் மூலமாக தமிழ்நாடு மக்களுக்கு அனைத்து தெய்வ வழிபாடு தலங்களையும் வழிபடுவதற்கு ஒரு எளிதான வழியை எங்கள் குழுமம் அமைத்து தருவதை மக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்
மேலும் இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.