மெய்யூர்:
எஸ். ஆர். எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட துறை மாணவர்கள் இணைந்து
புளியமரக்கன்றுகள் நடும் விழா மெய்யூர் கிராமத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மெய்யூர் பஞ்சாயத்து தலைவர்,
பேராசிரியர் லட்சுமணன்,
நாட்டு நலப்பணி திட்ட ஆலோசகர் மற்றும் உதவி பேராசிரியர் கீதா மற்றும் தன்னார்வல மாணவர்கள் கலந்துக்கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும் 100 தென்னை மரக்கன்றுகளும் 50 புளிய மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் சுற்றுப்புற சூழல் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வும், சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சார சேமிப்பின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.