திருத்தணி:சவீதா செவிலியர் கல்லூரி, சவீதா மருத்துவ மற்றும் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனம் இந்திய சமூக நல அமைப்புடன் இணைந்து உலகசுகாதார தினத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான தொடக்கங்கள் நம்பிக்கையுடனான எதிர்காலங்கள் ” என்கிற தலைப்பின் கீழ் பகத்சிங் நகர். வீரகநல்லூர் பஞ்சாயத்து திருத்தணி பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

இம் முகாமில் சமூக நல செவிலியர் துறைபின் பேராசிரியர் முனைவர் கோ. புவனேஸ்வரி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

மேலும் சவீதா செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி இந்த முகாமின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கி பேசினார்.
அடுத்து இந்திய சமூக நல அமைப்பின் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மேற்பார்வையாளர் ஏழுமலை இந்த முகாமின் மூலம் பகத்சிங் நகர் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உடல் நலத்தையும்
குறித்து விளக்கமளித்தனர்.

இந்த முகாமின் முக்கிய நோக்கம் பெண்களின் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல்,உடல் நல பரிசோதளைகள் மற்றும் ஆலோசனை
களை வழங்குதல்,
மேலும் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவையான மருந்துகள் வழங்குதல், ,சவீதா மருத்துவம் மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது .
இதில் மொத்தம் 102 பழங்குடி மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர், அதில் 30 பெண்கள் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர்.
இந்த முகாமிற்கு நரம்பியல் அறுவை சிகிச்சை அறக்கட்டளை, சென்னை சிநேகம் மற்றும் ரோட்ராக்ட் கிளப் நிதி உதவி அளித்தன.
மேலும் முனைவர் தமிழ்செல்வி,
குழுவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு சேவையாற்றினர்.

இந்த முகாமின் இறுதியில், முனைவர் பா.தேன்மொழி பழங்குடி சமூகத்தில் உள்ள பின்தங்கிய பெண்களுக்கான இந்த முகாமை ஏற்பாடு செய்யும் அரிய வாய்ப்பை வழங்கிய வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன் மற்றும் துணைவேந்தர் டாக்டர் வி. தீபக் நல்லசாமி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.