மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் கொளத்தூர், ஜமாலியா, பெரம்பூர்,கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்கள் புயல் வெள்ள நிவாரண உதவிகளாக உணவு மற்றும் அன்றாட தேவைக்கான பொருட்களை வழங்கினார். இவருக்கு சமூக ஆர்வலர் பிரவீன் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர்.