திருச்சி:எண்ணற்ற தொடர் சமூக சேவையில் வெள்ளி விழா கண்ட
LORDS CLUBS INTERNATIONAL
(சர்வதேச மனித கடவுள்கள் சங்கங்கள்)
சர்வதேச தலைவர் மற்றும் சமூக சேவகர் லார்ட்ஸ் ம.பால்ராஜ் அவர்களை குறித்த ஓர் பார்வை:

இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகாலமாக (கால் நூற்றாண்டு காலம்) தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு எண்ணற்ற தொடர் சமூக சேவைகள் செய்து வரும் சமூக சேவகர் ம.பால்ராஜ் அவர்களின் தொடர் சமூக சேவைகள் எண்ணற்றவை,
சமூகசேவகர் ம.பால்ராஜ்
வாழ்க்கையில் அன்பையும் நட்பையும் ஒற்றுமையையும் கடைபிடித்தால் வாழ்க்கையில் ஜெயிப்பது எளிது என்பதே இவரது கொள்கையாகும்.

மேலும் உலக மக்களிடம் ஊழலும், பிச்சைக்காரர்களும், வறுமையும் இல்லா புதியதோர் உலகை படைக்க வேண்டும் என்பது இவரது லட்சியமாகும்………

லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல்,
இந்திய அரசின் பதிவுசெய்யப்பட்ட சர்வதேச சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும்,சர்வதேச லார்ட்ஸ் பிரஸ்கிளப்ஸ்களின் சர்வதேச நிருபர்களின் தலைவரும், லார்ட்ஸ் டுடே சர்வதேச மாத இதழின் தலைமை செய்தி ஆசிரியரும்
சமூக சேவகருமான லார்ட்ஸ் ம.பால்ராஜ் அவர்கள் இவரது சமூக சேவைகளில் பல ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏழை-எளியோருக்கும் இலவச கம்யூட்டர் தொழிற்கல்வி, நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ உதவியும், நிதி உதவியும், இரத்ததான உதவியும் செய்து குணமடையச் செய்து அவர்களுக்கு நீண்ட கால ஆயுள் பெற்றுத் தந்துள்ளார்.

இவர் இதுவரையில் இலட்சக்கணக்கான இரத்த தான முகாம்கள் நடத்தியுள்ளார். பல கோடிக்கணக்கான மரம் வளர்ப்புகளும் செய்துள்ளார். பல லட்சக்கணக்கான பசித்தோருக்கு உணவளித்து அன்னதானம் செய்துள்ளார். சாலையோரம் சுற்றித்திரியும் எண்ணற்ற மனநலம் சரியில்லாதவர்களை தேடிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து குணமடைய செய்துள்ளார்.

சாலையோர பிச்சைக் கேட்பாளர்களை தேடிச் சென்ற உணவளித்து அனாதை இல்லத்தில் சேர்த்து உண்ண உணவும், உடுத்த உடையும், தங்கும் இடமும் மருத்துவமும் கிடைக்கச் செய்துள்ளார்.

நூற்றுக்கணக்கான அனாதைக் குழந்தைகளை அனாதை ஆசிரமங்களில் சேர்த்து உண்ண உணவும், உடுத்த உடையும, தங்கும் இடம், மருத்துவத்துடன் கல்வியும் கிடைக்கச் செய்துள்ளார்.

ஏழை எளியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாழ்நாள் பென்ஷன், கணவனை இழந்த பெண்களுக்கு விதவைகள் வாழ்நாள் பென்ஷன், முதியோர்களுக்கும் முதியோர் வாழ்நாள் பென்ஷன் போன்றவற்றை மாநில அரசிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழிற்கல்வி அளித்து வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுத்துள்ளார்.

எண்ணற்றவர்களுக்கு கண் கண்ணாடி வழங்குதல், கண் அறுவை சிகிழ்ச்சை செய்தல், செயற்கை கை மற்றும் செயற்கை கால்கள் வழங்குதல் பல கோடிக்கணக்கான மரக்கன்றுகள் உறுப்பினர்கள் உதவியுடனும் நட்டுள்ளார்.

மேலும் பொது மக்களிடையே மத ஒற்றுமையையும் மனித நேயத்தையும் வளர்ப்பதற்காக இவரது லார்ட்ஸ் டுடே ஆன்மிகம் மற்றும் சமூக சேவை பத்திரிகையில் தொடர்ந்து பகவத்கீதை, பைபிள், குரான் இம்மூன்றையும் உலக ஊடக வரலாற்றில் எந்த ஊடகங்களும் செய்திடாத இவரது லார்ட்ஸ் டுடே ஊடகத்தில் மட்டும் உலக ஊடக வரலாற்றில் முதல்முறையாக மெகா தொடராக தொடர்ந்து பல மாதங்களாக பிரசுரித்து உலக மக்களிடையே மத ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் சேவை உணர்வையும் தமிழ் மொழியையும் உலகம் முழுவதும் பரவச் செய்து அனைத்து மதங்களும் தமிழ் மொழியும் உலகெங்கிலும் அழியாமல் வளர்த்து வருகின்றார்.

தமிழை தாய்மொழியாக கொண்ட இவரது பெயரிலேயே கடந்த 25 ஆண்டுகாலமாக மூன்று மதங்களின் சின்னங்களையும் மத ஒற்றுமைக்காக பதித்திருப்பது மிகச் சிறப்பானதாகும்.

மேலும் இவர் இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை மத்திய- மாநில அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் ஊடகங்களின் வாயிலாக எடுத்துச் சொல்வதும் இந்தியர்களின் பொருளாதாரம் அயல்நாடுகளுக்கு செல்லவேண்டாம் என்றும் தொடர்ந்து 25 ஆண்டு காலமாக அகிம்சை வழியில் அறப்போராட்டங்கள் நடத்துவது மற்றும் பல எண்ணற்ற ஊழல்,அரசியல், விழிப்புணர்வு விஷயங்கள் உட்பட மதுவிலக்குப் போராட்டங்கள் நடத்துவது, இந்தியர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றி உயர்த்த முயற்சிப்பதும், ஊழலை எதிர்த்து போராடுவது, வீர தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்காகப் போராடுவது, பசுமாடுகள் அடிமாடுகளாக்க கூடாது என்று போராடுவது, கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தருவதற்காக விவசாயிகளுக்காகப் போராடுவது, மேலும் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வேண்டியும் அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்திவருவதும் ஏழைகளும், ஏழை குழந்தைகளும் அன்றாடம் அருந்தும் ஆவின் பால் விலை ஏற்றத்தை குறைக்கவேண்டியும் பல்வேறு போராட்டங்களுக்காக நேரடியாக வீதியில் களம் இறங்கி போராடி பல போராட்டங்களில் வெற்றி கண்டுள்ளார் ம.பால்ராஜ்.

25 ஆண்டுகாலமாக அனைத்து சமூக மக்களுக்குமான சமூக சேவை வழியில் நேர்மையுடன் பயணிக்கும் இவரை அனைத்துச் சமூகத்தில் இருந்தும் பல இளைஞர்கள் பின்பற்றி இவரை ரோல் மாடலாகவே கருதி இவர் வழியில் பல ஆண்டு காலமாக இவரைப் பல இளைஞர்கள் பின்பற்றி இவரை பின்தொடர்கின்றார்கள்.

நல்லவர்களுக்கு என்றுமே இறைவன் துணையிருப்பார் என்பது போல இவரது சமூக சேவையைப் பாராட்டி இவருக்கு சிறந்த சாதைனையாளர் விருது, சிறந்த மனிதநேயர் விருது, சிறந்த பத்திரிகையாளர் விருது, சிறந்த சமூகசேவகர் விருது மேலும் பல எண்ணற்ற விருதுகளை நீதிபதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்தும் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ம.பால்ராஜ் அவர்களது ஆயுளும், சேவையும் முடிவில்லாமல் இதுவரையில் தொடர்ந்து தொடர்வது போன்று மேலும் பல பல ஆண்டுகாலங்கள் மேலும் மேலும் முடிவில்லாமல் தொடரட்டும்.

கடந்த 25 ஆண்டு காலங்கள் தொடர்ந்து சமூக சேவை செய்துவரும் லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சர்வதேச தலைவர் லார்ட்ஸ் ம.பால்ராஜ் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் ஹோட்டலில் அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக் கழகம் கௌரவித்து டாக்டர் பட்டம் அளித்து கௌரவப்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு :
Lords Dr. M.பால்ராஜ்,
Founder | International President
LORDS CLUBS INTERNATIONAL
Govt. Reg. No. : 1359/2013
Website: www.lordsclubs.com
E-mail: lordsclubsinternational@gmail.com
Mob.ile: + 91 98405 59673 / + 91 97908 55633