ராயப்பேட்டை:நடிகர் திலகம் பத்ம ஸ்ரீ செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப்பிரிவு தலைவர் தலைவர் பா.சந்திரசேகர் , கலைப்பிரிவு மாநிலச் செயலாளர் சூளை K.ராஜேந்திரன் மற்றும் கலைப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.