மதுரை:தமிழ்நாடு அரசு அறிவித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி உயர்வினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள், மதுரை மாவட்டத்தில் 21 பேருக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துனை இயக்குனர் அலுவலகம் முன்பு நிர்வாகிகளான ஈஸ்வரி அவர்கள் தலைமையிலும், மதி, காளியம்மாள் ஆகியோர் முன்னிலையிலும்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மனிதநேயர். முனைவர் நா.சு. செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வசந்தா, செல்வி. மல்லிகா, வளர்மதி. கருப்பி, சகாயம், மலர்கொடி, லட்சுமி உள்ளிட்ட சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.