மதுரை :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் பி. செல்வி அவர்கள் தலைமையிலும்,மல்லிகா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில். மாநில தலைவர் மனித நேயர் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த கூட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை யாளர்கள் பணிமாற்றம் தகுதியானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும், ஏனைய ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பணிமாற்றம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் முனியம்மாள் அவர்கள் நன்றியுரை நல்கினார்.