அண்ணாசாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்களின் பணி ஓய்வு ஆணை வழங்கும் நிகழ்வு!

சென்னை:
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின்,
முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின் இணை பேராசிரியரும், தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எஸ். சி /எஸ்.டி ஆசிரியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜோதிராணி அவர்களின் பணி ஓய்வு ஆணை வழங்கும் நிகழ்வு சென்னை,
அண்ணா சாலையிலுள்ள கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் இவரின் 22 ஆண்டுகால கல்வி பணியிலிருந்து பணிநிறைவெய்தியதற்கான ஆணையை கல்லூரி முதல்வர் என். ரமா அவர்கள் வழங்கினார். மேலும் கொடையாக வழங்கப்பட்ட அம்பேத்கர் படத்தினை கல்லூரியில் திறந்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் நிதியாளர் மற்றும் கல்லூரி கண்காணிப்பாளர் ஆகியோர்
பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புச்செய்தனர்.

இந்த சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்த அலுவலக பணியாளர் கனிமொழி மற்றும் செய்யது உள்ளிட்ட அனைத்து உதவியாளர் களுக்கும், அனைத்துத் துறை சார்ந்த தலைவர்களுக்கும்,
அனைத்துத்துறைப்பேராசிரியர்களுக்கும். தேர்வுக்கட்டுப்பாட்டுத் துறைக்கும் ,
பொது நூலகர் அவர்களுக்கும்,
தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எஸ். சி. எஸ். டி சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் ,
TNGCTA சங்க உறுப்பினர்களுக்கும், கௌரவித்த கல்வியாண்டின்
பேராசிரியர் சங்க நிர்வாகிகள்
மற்றும்
அனைத்துப் பேராசிரியர் பெரு உள்ளங்களுக்கும் தனது
நன்றியை தெரிவித்துக்கொண்டார்.


மேலும் முனைவர் ஜோதிராணி அவர்கள் கல்லூரி வளர்ச்சியில் எனது பங்கு சிறப்பாக இருந்ததாக எண்ணி, மனநிறைவுடன் பணி ஓய்வு பெறுகிறேன் என முனைவர் க. அ. ஜோதிராணி அவர்கள் பெருமிதம் அடைந்தார்.
மேலும் இவர் இக்கல்லூரியில் எம்.ஏ.வகுப்பு மற்றும் முதுகலை உயராய்வு முனைவர் பட்ட ஆராய்ச்சி மையம் தொடங்குவதற்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார், அதுமட்டுமில்லாமல் நல்லாசிரியர் விருது,பாரதியார் தமிழ் செல்வர் விருது மற்றும் தமிழ் குரிசில் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பெண்ணியம், தலித் பெண்ணியம் கோட்பாட்டு சிந்தனைகள் என்ற நூலிற்காக சமுக நலன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் திரு கரங்களால் சிறந்த எழுத்தாளர் விருதும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் 11க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

மேலும் முனைவர் ஜோதிராணி அவர்கள் சங்க இலக்கியங்களில் விளிம்பு மக்களின் மேம்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தமைக்காக தில்லி பல்கலைக்கழகம்விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் 22 ஆண்டுகாலம் கல்விப்பணி ஆற்றிமைக்காக தமிழ்நாடு அரசால் இவர் பாராட்டப்பட வேண்டும் என்று ஆராய்ச்சி மாணவர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.