பூந்தமல்லி:சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் களின் சார்பில் கடந்த 09.12.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 2014 ஆம் வருடம் ஆரம்பித்த பூந்தமல்லி வெடி வழக்குகள் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தை செயல்பட வைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துக்களை தெரிவித்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும்
சென்னை மாநகரத்தில் இருந்தும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மேற்படி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காட வரும் வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்ட பொதுமக்கள், அன்றாடம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் வழக்கறிஞர்களால் எடுத்துரைப்பட்டது.

குறிப்பாக வழக்காட வரும் வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்ட பொதுமக்கள், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பெண்கள், மற்றும் குழந்தைகள்,
மாற்றுத்திறனாளர்கள், நீதிமன்ற பணியாளர்கள், காவல்துறையினர் ஆகிய அனைத்து தரப்பினரும் கழிவறை வசதிகள் தகுந்தபடி நவீன வசதிகளோடு, தகுந்த எண்ணிக்கையில் இல்லாமையால் படும் அவல நிலை குறித்து பேசப்பட்டது.
மேலும் அவர்கள் தகுந்த முறையில் குடிதண்ணீர் வசதிகள் இல்லாமல் அனைவரும் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.

சென்னையின் பல பகுதிகளில் இருந்தும்,பிற மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், மாநிலங்களிலிருந்தும் வரும் வழக்கறிஞர்களுக்கு வழக்காடிகளிடம் வழக்கின் விவரங்களை பெறுவதற்கும், சீருடை மாற்றுவதற்கும், படிப்பதற்கும், உணவு உண்ணவும், ஓய்வெடுக்கவும், வழக்கறிஞர்க அறை இல்லாமை பெரும் குறையாக கூறப்பட்டது.

அரசியல் சட்ட பிரிவு 21 வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின் படி, வழக்கு விசாரணைக்கு உகந்த சூழ்நிலைகள் இல்லையென அனைவராலும் சொல்லப்பட்டது.

அன்றாடம் வழக்காட வரும் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும்,துன்பப்பட்ட மனதோடு செல்வதாக கூறப்பட்டது.

இப்பிரச்சனைகளுக்கு
தகுந்த பரிகாரம் காண மனுக்களை தயார் செய்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தின் முடிவில் இச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. இதில் தலைவராக
செ.விஜயகுமார்,
ஏ.ஓ.முஹம்மது ஷர்புதீன்-துணைத்தலைவர்,
அ.ஸ்டீபன்- செயலாளர்,
எச் ஜன்னத் நிஷா-துணைச் செயலாளர்,
ஆ.ராவுத்தர் நைனா முகமது -பொருளாளர்,
கி. நடராசன்- துணைப் பொருளாளர்,
செயற்குழு உறுப்பினர்களாக
அ.கம்ருதீன்,
வி.சகிலா
எல்.தங்கப்பா,
முகமது பைசல்,
எம்.முகமது அசாருதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.