பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நிகழ்வு!

பெருமாள்பட்டு:பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்
விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும் இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றும், ‘அணுசக்தி நாயகன்’ என்றும், ‘தலைசிறந்த விஞ்ஞானி’ என்றும், ‘திருக்குறள் வழி நடந்தவர்’ என்றும், ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 92 வது பிறந்தநாள் விழா கல்லூரி அரங்கில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினாரக குணசீலன் ரவீந்திரன் அவர்கள் (CEO, KITE ROBOTICS) கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கட்டுரை போட்டி(தமிழ் மற்றும் ஆங்கிலம்), ஓவிய போட்டி மற்றும் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

முதலில் பேச்சு போட்டிக்கான பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 13 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் பரிசை மாணவி ரஞ்சனா, இரண்டாம் பரிசை மாணவர் சுகனேஷ் மற்றும் மூன்றாம் பரிசை மாணவி சிந்துஜா அவர்களும் வென்றனர்.

அடுத்ததாக ஓவிய போட்டிக்கான பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 18 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் பரிசை மாணவி தமிழ் அழகி , இரண்டாம் பரிசை மாணவர் கெளதம் மற்றும் மூன்றாம் பரிசை மாணவி சவிதா அவர்களும் வென்றனர்.

அடுத்துதாக கட்டுரை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) போட்டிக்கான பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 15 மாணவ , மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழுக்கான முதல் பரிசை மாணவி ரம்யா , இரண்டாம் பரிசை மாணவர் ஜெயசூர்யா மற்றும் மூன்றாம் பரிசை மாணவி சிந்துஜா அவர்களும் வென்றனர். அடுத்து ஆங்கில கட்டுரைக்கான முதல் பரிசை மாணவி நந்தினி, இரண்டாம் பரிசை ஜனனிஶ்ரீயும் மற்றும் மூன்றாம் பரிசை மைதிரேயும் வென்றனர்.

இறுதியாக வினாடி வினா போட்டிக்கான பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 18 மாணவர்களை மூன்று அணியாக பிரிக்கப்பட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல் பரிசை A அணியை சேர்ந்த மாணவர்கள் யாசிர் அஹமத், லிங்கேஷ் மற்றும் மாணவிகள் முக்தாஸ்ரீ, பாவனாஶ்ரீ, ரித்திஶ்ரீ மற்றும் பார்கவி அவர்களும் வென்றார்கள்.

அடுத்ததாக இந்நிகழ்ச்சியில் பேராசிரியை I. தனபாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியை முனைவர் L.சிவகாமி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசை வழங்கி கௌரவித்தார் மற்றும் ஆங்கில பேராசிரியர் R. அருண் பிரசாத் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் வேதியியல் பேராசிரியை G. ஶ்ரீதேவி அவர்கள் நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் , தூய்மை பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் நன்றி கூறினார்.