கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் கூட்டரங்கில் மாநிலத் தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில பிரச்சார செயலாளர் கந்தநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நிறுவனர் பொதுச் செயலாளர் செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்டு இக்கூட்டத்தில் தீர்மானங்களை பற்றி உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 கிரிமினல் சட்ட திருத்தங்களை திரும்ப பெற கோரியும், தமிழக அரசு பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும், தமிழகத்தில் உள்ள அனைத்து மது உற்பத்தி ஆலைகளையும் உடனடியாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் கள்ளச்சாராய சாவுகளிலிருந்து பொது மக்களை காத்திட தமிழகம் முழுவதும் கல்லு கடைகளை உடனடியாக திறந்திட வேண்டும்,மாநில முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து வகையான உணவு பொருட்களையும் முறையாக ஆய்வு செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் உணவுகளை தடை செய்வதோடு, உணவு விடுதி உரிமையாளர்களை கைது செய்திட வேண்டும் ,
மற்றும் உணவு விடுதிகளுக்கு சீல் வைக்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசை வற்புறுத்த கள்ளக்குறிச்சியில் செயல்படும் அனைத்து இயக்கங்களையும் அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மக்கள் கூட்டமைப்பு என்கிற அமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிப்பது, வாடிக்கையாளர் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்திட்ட ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு இந்திய அரசின் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் மக்களும் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திற்கு மாறிட வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்களை இந்த நிர்வாகிகள் ஆலோசனை நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில் சக்திவேல், பன்னீர்செல்வம், சதீஷ்குமார், சங்கரநாராயணன், காமராஜ், கோவிந்தராசு, ராஜேந்திரன், பாஸ்கர், கந்தப்பிள்ளை, குமார், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மாநில பொதுச் செயலாளர், மாநில இளைஞரணி செயலாளர்கள், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.