பட்டாளம் – புளியந்தோப்பு ஜெயின் சங்கம் மற்றும் நார்த் டவுன் ரெசிடென்ஸ் அசோசியேஷன் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு
சென்னை : கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏழை ,எளியோர், சாலையோர ஆதரவற்றோர் பொது மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக இருக்கும் வேளையில் இதனை கருத்தில் கொண்டு பட்டாளம் – புளியந்தோப்பு ஜெயின் சங்கம் மற்றும் நார்த் டவுன் ரெசிடென்ஸ் அசோசியேஷன் சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் கே.எம்.கார்டன், பின்னிமில்ஸ், வட சென்னை, பட்டாளம், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வேலு மற்றும் புளியந்தோப்பு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இந்திராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு கன்னிகாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சி சங்க நிர்வாகிகளான அஜீத் லோதா, சாந்தி லால் லுனாவத், பரத் பலார் மற்றும் கிஷன் லால் மெர்லாச்சா ஆகியோர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைப் பெற்றது..
எஸ்.ஏ.ராஜ்குமார்
(செய்தியாளர்)