எழும்பூர்: சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வை சென்னை சமூகப்பணி கல்லூரியின் தலைவர் முனைவர். இராஜா சாமுவேல் அவர்கள் துவக்கி வைத்தார்.
சமூக பணித்துறை தலைவர் சத்திய மூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந் நிகழ்வில் பாலின கல்வி வல்லுநர் முனைவர். செல்வி ராஜலக்ஷ்மி, சமூக செயல்பாட்டாளர்களான செல்வி ஓல்கா பி ஆரோன், செல்வி க்ராஸ் பானு சொனேஷ், சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா ஆகியோர் பயிற்றுநர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

இப்பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முப்பத்திற்கும் மேற்பட்ட சமுகப்பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் , திருநர்கள் அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை சமூகப்பணி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்துதல் துறை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.