சென்னை:அனைத்து சமுதாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வழக்கறிஞர்கள் மீது தொடர் கொலை வெறி தாக்குதல் மற்றும் படுகொலையை கண்டித்து மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதன் தலைவர் எம்.ஜி. கே. ஆளவந்தார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்ந அறவழிப்போராட்டத்தில்
வழக்கறிஞர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டு வந்த வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்திலும், தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சேம நல நிதியை 50 லட்சம் ஆக உயர்த்தி வழங்க கோரியும், வழக்கறிஞர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையிலும் இலவசமாக மருத்துவம் வழங்க கோரியும் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் இந்த அறவழிப்போராட்டத்தில் செய்தி தொடர்பாளர் செந்தில், துணைத் தலைவர் பிரசாந்த், மாநில செயலாளர் சிவக்குமார், மாநில துணை பொது செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் முகுந்தன்,சட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டனர்.