இராயபுரம் :
இந்திரா நகர் மீனவ பொது நல கிராம சபை மற்றும் கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சிந்தனை சிற்பி மா.வே.சிங்காரவேலர் இரவு பாடசாலை திறப்பு விழா மற்றும் பெண்கள் ஆலோசனைக் கூட்டம் இராயபுரம் தொகுதிகுட்பட்ட காசிமேடு, இந்திரா நகர் விநாயகர் கோவில் அருகில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் இராயபுரம் சரக காவல் உதவி ஆணையர் திரு.எஸ்.தினகரன் மற்றும் கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.என்.பால் சுந்தர் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வு இந்திரா நகர் மீனவ பொது நல கிராம சபை தலைவர் பி.ரகுநாதன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பாக நடைப்பெற்றது.இதில் முன்னால் தலைவர் பி.குமார் மற்றும் நிர்வாகிகளான தேவேந்திரன், ராம்நாத், அப்பு, வினோத், விக்னேஷ் மற்றும் மீனவ சமுதாய தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திறளாக கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று அச்சத்தால் இதுவரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கல்வியை தொய்வின்றி கற்கும் வகையில் இந்த இரவு நேர பாட சாலையை திறந்து வைக்கப்பட்டது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

எஸ்.ஏ.ராஜ்குமார்(யுகம் நியூஸ்)

96 77 34 91 96