சென்னை:சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது.

முன்னதாக இந்த விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நடைபயண பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் மற்றும் ஷெர்லின்,இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பின் நிறுவன செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன்,
குழந்தை பராமரிப்பு நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் மற்றும் ஷெர்லின் ஆகியோர் குழந்தைகள் தின விழாவில் குழந்தை தொழிலாளர்களின் கல்வி,பாதுகாப்பு, உரிமைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். இதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டன.