மயிலாப்பூர் : முன்னாள் தமிழக முதலமைச்சரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 124 (அ) வட்ட கழக செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் தென்சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மயிலாப்பூர் பகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.முரளி முன்னிலை வகித்தார் ,வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜி.பி.செந்தில்நாதன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென் சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் லயன் சி.எஸ்.நந்தகுமார் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
மேலும் இந்த நிகழ்விற்கு வந்திருந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு அவர்களுக்கு மயில் சிலையும், மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.முரளி மற்றும் வட்ட கழக செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வேலும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திறளாக கலந்துக் கொண்டனர்.
பொதுமக்கள் சரியான முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் நலத்திட்ட உதவிகளை பெற்றுச்சென்றனர்.