எனது மண் எனது தேசம் – அம்ரித் கலாஷ் யாத்ரா முன்னெடுப்பு திட்டம்!
காஞ்சிபுரம்: ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ் (சுதந்திரத்தின் இனிய கொண்டாட்டம்) என்ற நிகழ்வின் சிறப்பான நிறைவிற்கு எமது பங்களிப்பாகவும், அஞ்சலியாகவும் “எனது மண் எனது தேசம் – அம்ரித் கலாஷ் யாத்ரா” என்ற முன்னெடுப்பு அமைகிறது. இந்திய அரசால் பேரார்வத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பான முன்னெடுப்பு திட்டம், ஒரே நேரத்தில் கீழ்வரும் இரு நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் முயற்சியாக திகழ்கிறது. தேசத்தின் மீது ஆழமான பெருமை உணர்வை மக்கள் மனங்களில் பதிய வைப்பது மற்றும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக மிக உயர்ந்த தியாகமான உயிர்தியாகத்தை செய்திருக்கும் தீரம் மிக்க தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது.
இதனை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மற்றும் கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகளை இந்தியன் வங்கி சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. இந்தியன் வங்கியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊராட்சி, நகராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வீடுகளிலிருந்து புனித மண்ணை (மிட்டி) கலசத்தில் சேகரிக்கும் சடங்குடன் இந்நிகழ்வுகள் தொடங்கின. தேசபக்தியை தூண்டும் பாடல்களை பள்ளி குழந்தைகளும் மற்றும் இந்நிகழ்வுகளில் உற்சாகத்தோடு பங்கேற்ற பிற நபர்களும் பாடி தங்களது தேசத்தின் மீதான மதிப்பையும், அன்பையும் வெளிப்படுத்தினர். அத்துடன், நமது மூவர்ண தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது.
இந்திய நாடெங்கிலும் சேகரிக்கப்படும் மண்ணானது, “அம்ரித் கலாஷ்” என்ற புனித கலசத்தின் வழியாக புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்படும். நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்ன அமைவிடத்திற்கு அருகே ‘அம்ரிக் வாடிகா’ என்பதை உருவாக்குவதற்கு நாடெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள இந்த மண் பயன்படுத்தப்படும். ஒருங்கிணைந்த தேசத்தின் வலுவான ஆற்றலை பிரதிபலிக்கும் வகையில், ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்டா பாரத்’ என்பதன் ஒற்றுமைக்கு சான்றாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகின்ற இந்த முன்னெடுப்பு திகழ்கிறது.
தைரியம் மிக்க தியாகிகளை கௌரவிக்க நாடு முழுவதிலும் பல்வேறு செயல்திட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இதன்மூலம் அவர்களது மாண்புகள் போற்றப்படவும், அவர்கள் விட்டுச்சென்ற மதிப்பீடுகள் தொடர்ந்து நம்மால் பின்பற்றப்படவும் இத்திட்டங்கள் வழிவகுக்கும்.