கிண்டி :
நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் நலம் தரும் நவராத்திரி என்கிற நிகழ்வு கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.கரு. நாகராஜன் மற்றும் விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நலம் தரும் நவராத்திரி என்னும் நிகழ்ச்சியில் நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் கொரோனா பரவல் தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் நோக்கத்தோடு கோவிட் வாரியர்ஸ் 2020 என்ற விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கொரோனா விழிப்புணர்வு நடமாடும் கொழு வாகனத்தை திரு.கரு.நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நவராத்திரியை முன்னிட்டு இந்த நடமாடும் கொழு வாகனம் 5 நாட்களுக்கு சென்னையை சுற்றியுள்ள கோவில்கள் மற்றும் குடிசை பகுதி மக்களும் கண்டு களிக்கும் வகையில் இந்த நடமாடும் கொழு வாகனம் நிற்கும்.

இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை நேவிகேட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிதனிகா சந்திரசேகர் சிறப்பாக செய்திருந்தார்.

எஸ்.ஏ.ராஜ்குமார்

(செய்தியாளர்)

96 77 34 91 96