மீனம்பாக்கம்:
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின்
‘சர்தார் 2022’ ஏன்கிற கண்கவர் கலைவிழா ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

இக் கல்லூரியின் மேனாள் செயலர் ஸ்ரீ சர்தார் மல்ஜி சோர்டியா அவர்களை நினைவு கூறும் வகையில் நிர்வாகத்தினரால் இம்மாபெரும் கலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இளந்தொழில் முனைவோராகிய மாணவர்கள் தங்கள் தொழில் திறமையை நிரூபிக்கும் வகையில் 40 அங்காடிகளை கல்லூரி வளாகத்தில் நிறுவி இருந்தனர்.

மாணவர்களின் தொழில் திறமை இவ் விழாவின் சிறப்பம்சமாகவும் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் அமைந்தது.

பதிவு செய்த பாடல்களை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒலிபரப்பச் செய்து ஆடி, பாடி மகிழ்ந்த காட்சி இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பினை ஏற்படுத்தியது.
இந்த கலை நிகழ்ச்சிக்களுக்கான செலவுத் தொகையில் பங்குதாரராக தங்களை இணைத்துக் கொண்ட Medopharm, A&A Electric Motor, IIKM MBA School, Go Colours, ZEE Thamizh Dance Jodi Dance – நிகழ்ச்சியாளர்களின் நேர்காணல் அங்காடி, Chennai Business School, குருச்சேத்ரா IAS பயிற்சி நிறுவனம் ஆகியோர் தங்களின் அங்காடிகளைக் காட்சிப்படுத்தி
இருந்தனர்.

மாணவர்களும், கைவினைப் பொருட்கள், இளம் தலைமுறைக்கான வண்ண ஆடைகள், அலங்காரப் பொருட்கள், உணவுப் பொருட்கள்,
குளிர்பானங்கள், பழச்சாறுகள், விளையாட்டுப் போட்டிகள் எனப் பலவகையான அங்காடிகளில் தங்கள் வணிக மேலாண்மையை நிலைநாட்டினர்.

சர்தார் 2022 கலைநிகழ்வு மிகச் சரியாக பிற்பகல் 3:00 மணியளவில் தொடங்க, சிறப்பு விருந்தினராக விக்ரம் வேதா தமிழ் திரைப்படபுகழ் கதிர் மாணவர்களின் பலத்த ஆரவாரத்திற்கிடையே அரங்கில் தோன்றினார்.
பல்வேறு துறைகளிலிருந்தும் வந்த பிரபலங்கள் நிகழ்வின் நடுவர்களாக வீற்றிருக்க, ஜெயின் கல்லூரி மாணவர்களுக்கான இந்தக் கலைவிழா ஒரு முத்திரை பதித்த விழாவாக நிகழ்ந்தேறியது.

மாணவர்கள் பல தரப்பட்ட கலைநிகழ்வுகளிலும், தங்கள் திறமையைப் பறைசாற்றியதால் அரங்கமே மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தது.

இம்மாபெரும் கலைவிழாவில் பங்கேற்றிருந்த பார்வையாளர்களின் மிகப் பெரும் ஆரவாரங்களுக்கிடையே மாணவர்கள் ஆர்வத்துடன் கலைநிகழ்வுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை அரங்கேற்றினர்.
நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் திண்டாடுகின்ற வகையிலே மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இக்கண்கவர் கலை நிகழ்வு மாணவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த நிகழ்வாக அமைந்தது.
பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அரங்கத்தைத் தன் பக்கம் ஈர்த்தனர் சிறப்பு விருந்தினர்கள்,
மாணவர்களின் இனிய இசையைச் செவிமடுத்து மிகச் சிறந்த இசைவாணர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுப் பாடகி அனுராதா வெங்கட் அவர்களும், பாடகர் விமல்ராஜ் சோர்டியா அவர்களும் வருகை தந்திருந்தனர்.

இனிய இசையால் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திய மாணவக் குழுக்களில் Madness Team ரூ. 10,000 மதிப்புள்ள முதல் பரிசையும், Crew 5 Rythmic stars ரூ. 5000 மதிப்புள்ள பரிசையும், Hiphop Deerz ரூ. 2000 மதிப்புள்ள மூன்றாம் பரிசையும் வெல்ல, பாடகி அனுராதா வெங்கட் அவர்களும் பாடகர் விமல்ராஜ் சோர்டியா அவர்களும் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

பல்வேறு கலைநிகழ்வுகளைத் தங்களின் நுண்ணோக்குப் பார்வையால் மதிப்பீடு செய்ய, தலைமைப் பண்புப் பயிற்றுநர் கிருத்திகா அஜய் அவர்களும் ,நடிகர் சஞ்சய் அஸ்ரானி அவர்களும் நடுவர்களாகத் தடம் பதித்தனர்.

தங்களின் பல்கலைத் திறமையால் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திய மாணவக் குழுக்களில் போர்க்கலைக் குழு 10,000 மதிப்புள்ள முதல் பரிசையும்,FITTOK குழு 5000 மதிப்புள்ள பரிசையும்,Mastero Mimers குழு 2000 மதிப்புள்ள மூன்றாம் பரிசையும் வெல்ல, , தலைமைப் பண்புப் பயிற்றுநர் கிருத்திகா அஜய் அவர்களும் நடிகர் சஞ்சய் அஸ்ரானி அவர்களும் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
சிறந்த முறையில் உடல் அசைவுகளோடு ஆடல் நிகழ்த்திய மாணவர்களை அடையாளப்படுத்த நடனப் பயிற்றுநர் மான்சி பட் அவர்களும் நடனப்போட்டி நிகழ்ச்சியின் துணை இயக்குநர் தமிழரசன் ராகுல் அவர்களும், அரங்கை அணி செய்தனர்.

தங்களின் நடனத் திறமையால் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திய மாணவக் குழுக்களில் THE FLEXERS குழு ரூ 10,000/-மதிப்புள்ள முதல் பரிசையும், SHADOW SQUAD குழு ரூ5000 /- மதிப்புள்ள பரிசையும், FOUR COUPLES குழு ரூ 2000/-மதிப்புள்ள மூன்றாம் பரிசையும் வெல்ல, நடனப் பயிற்றுநர் மான்சி பட் அவர்களும் நடனப்போட்டி நிகழ்ச்சியின் துணை இயக்குநர் தமிழரசன் ராகுல் அவர்களும் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் மகனும் நடிகரும் தொழிலதிபருமான சஞ்சய் சங்கர் அவர்களும் நடிகர் ராஜ்கமல் அவர்களும் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி, நிகழ்வை நிறைவு செய்தனர்.

Zee thamizh தொலைக்காட்சியில் பணியாற்றும் ராகுல் அவர்கள் நடனம் ஆடிய மாணவர்களில் 6 மாணவர்களை தங்கள் தொலைக்காட்சியில் DANCE JODI DANCE நிகழ்ச்சியில் தேர்வு செய்வதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்தார்.
நிர்வாகத்தினரால் சிறப்பு விருந்தினர்கள் நினைவுப்பரிசு கொடுத்து பெருமைப்படுத்தப்
பட்டார்கள்.