வளசரவாக்கம்:மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் – தமிழ்நாடு, மாநில தலைவருமான டி.எம்.தருமராஜா அவர்களின் தாயார் தெய்வத்திரு எம்.காந்திமதி அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வளசரவாக்கம் அக்க்ஷயா முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

மேலும் இங்குள்ள 50 க்கும் மேற்பட்ட மூத்தோர்கள் அனைவருக்கும் உணவு, வேஷ்டி, சேலை மற்றும் மதிய உணவை
டி.எம்.தருமராஜா அவர்கள் நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வி.பாஸ்கர்,
மாநில பொருளாளர்
என்.சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்களான எஸ்.முரளி,எ.ஆர்.திருநாவுக்கரசு, தென் சென்னை மாவட்ட தலைவர் எஸ்.வி.கோபிநாத் ,துணைத் தலைவர்
எம்.மதுரை இளஞ்செழியன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் டி.டென்னீஸ்ராஜா, பொறுப்பாளர் டி. தீபக்குமார் குப்தா, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் சி.இமையரசு,
துணை அமைப்பாளர் என்.கணேஷ் ராம், துணை பொறுப்பாளர்
பி.சுரேஷ், மற்றும் செய்தியாளர்களான தமிழன் டிவி ராஜா, வெளிச்சம் டிவி .ஜெயகர், யுகம் நியூஸ் ராஜ்குமார்,போர்முரசு டிவி செல்வராஜ், விடியும் நேரம் மோகன், அதிர்வலை டிவி நாராயணன் மற்றும் அஜித்குமார், விக்கி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



