சென்னை :ஜூன், 25,
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிகமாதொடங்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், வென்டிலேட்டர் உதவி தேவைப்படாத கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையில் 224 படுக்கைகள் கொண்ட தற்காலிக சித்த மருத்துவமனையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் சார்ந்த உணவு வழங்கப்படும். மேலும் மூலிகை குளியல் வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு
மூன்று முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வியாசர்பாடியில் அமைந்துள்ள தற்காலிக சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு, கபசுர குடிநீர், மூலிகை தேனீர், மூலிகை ஆவிப்பிடித்தல், மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை தினமும் வழங்கப்பட உள்ளது.

இதில்கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், டாக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.