மதுரை காமராஜர் பல்கலைகழக இணை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

எழும்பூர்:
பின்னடைவு காலிப் பணியிடங்களுக்காக முதன் முதலாக நீதிமன்றம் சென்று வெற்றிக்கனி பறித்துக்கொடுத்த முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பிரமாண்ட பாராட்டுவிழா சென்னை எழூம்பூர் கன்னிமாரா நூலகம் எதிரில் உள்ள இக்சா மையத்தில் காயிதேமில்லத் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஜோதிராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உச்சநீதிமன்ற சீனியர் கவுன்சில் ஏ.இ.செல்லப்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கி நாகூர் கனி அவர்களை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

மேலும் இந்நிகழ்வில் உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி வரலாறுத்துறை பேராசிரியர் மதியழகன் பின்னடைவு காலிப்பணியிடங்களை பெற்றுத்தரப் போராடிய போராளிகள் குறித்து எழுதிய புத்தகத்தை வெளியிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் பேராசிரியர்கள்‌ மாறவர்மன், ரெங்கராஜன், மன்ற பொதுச்செயலாளர் விழுப்புரம் கல்லூரி பேராசிரியர் சிவராமன்,மல்லிகா பேகம், பாமா,சுபாஷினி, ரேணுகா,ஜெயப்பிரியா, கலைநேசன், கென்னடி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏ. டி. கணேசமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள் பட தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

இறுதியாக பேராசிரியர் பார்வதி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

இந்நிகழ்வினை டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி பேராசிரியர் மா.து.ராசுகுமார் அவர்கள் சிறப்புற ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.