தண்டையார்பேட்டை :
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 4M டிரஸ்ட் சார்பில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பெண்கள் இரவு காப்பகத்தில் மெட்ராஸ் தின விழதண்டையார்பேட்டை
ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 4M டிரஸ்ட் மேளாலர் பெரிய தம்பி , சென்னை மாநகராட்சி உதவி ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா மற்றும் மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் சென்னை வரலாற்றை பற்றியும்,சென்னை மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயனாளிகளை மகிழ்ச்சிவிக்கும் விதமாக நடைப்பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.