ஈஞ்சம்பாக்கம், ஜூலை, 25
அரிமா மாவட்டம் 324 A1-ன் சார்பில் ஆளுனரின் கனவு திட்டமான Know Diabetes – NoDiabetes என்ற நீரிழிவு நோய் பரிசோதனையின் ஒரு முக்கிய சோதனையான HbAIC (மூன்று மாத சராசரி அளவு ) உடனடி பரிசோதனை திட்டத்தை சென்னை கிழக்கு அரிமா சங்கத்தின் பரிசோதனை மையத்தில் தொடங்கப்பட்டது. இதை அரிமா ஆளுனர் திரு பி.வி.பிரகாஷ் குமார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
இத்திட்ட விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுனரும், இத்திட்டத்தின் ஆலோசகருமான திரு.டி ஏ.எஸ். ராமமூர்த்தி, மாவட்ட முதல் துணை நிலை ஆளுனர் எஸ்.வி.மாணிக்கம் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 3500 பயனாளிகள் மூன்று மாத இடைவெளியில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான மருத்துவ அறிவுரைகள் வழங்கப்பட்டு ஆண்டின் இறுதியில் நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படும்.