சென்னை :உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் ஆலயத்தின் அருகில் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் வாழ்வாதாரம் இழந்து வாடும் மக்களுக்கு நடமாடும் வியாபார வண்டிகள் ,அரிசி மற்றும் காய்கறிகள், தையல் மிஷின்கள், முகக் கவசங்கள், போர்வை போன்ற பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் 1000க்கும் மேற்பட்டோருக்கு அரிமா சங்கத்தின் ஆளுனர் பி.வி.பிரகாஷ் குமார் அவர்கள் வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் பி.வி.பிரகாஷ்குமார் :உலக சேவை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோரும் உலகம் முழுவதும் லயன்ஸ் கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் பல்வேறு அரிமா சங்க கிளைகள் ஒருங்கிணைந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது என தெரிவித்தார்.