சமீப காலமாக ஊடகத்தின் பேசும் பொருளாக உள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தற்போது இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றை தொடர்ந்து ஐக்கிய அமீரகத்திலும் தனது முத்திரையை பதித்து உள்ளது.

துபாய் பகுதியில் இயங்கி வரும் WIT என்கிற அமைப்பு இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 100 பெண்கள் இந்திய வரைபடம் போல நின்றும், தேசிய கொடி ஏந்தி 50 படகுகளில் 500 க்கும் மேற்பட்டோர் இந்திய தேசிய கொடி ஏந்தி படகு சவாரி மூலம் பவனி வந்து புதிய உலக சாதனை படைத்தனர்.
இந்திய அகாடமி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் லிங்கன் புக் அப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் தேசிய கொடி ஏற்றி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். அங்கு பிரபலமாக உள்ள தமிழ் வானொலி ஒன்று (89.4 TAMIL FM) 15 மணி நேரம் வானொலி அறிவிப்பாளர் இன்றி தொடர்ந்து நேயர் விருப்ப பாடலை ஒளிபரப்பி புதிய உலக சாதனை படைத்தது. இதனை அங்கீகரித்து லிங்கன் உலக சாதனை விருது வழங்கினார்.

தமிழ் தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் பால் பிரபாகரன் அவர்களுக்கு தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் விருது, துபாய் மலையாளம் சங்கத்தினருக்கு சிறந்த மனித நேய அமைப்பு விருது, திருமதி ஷீலா அவர்களுக்கு சிறந்த வழக்கறிஞர் விருது மற்றும் ஐக்கிய அமீரக தமிழ் சங்கத்தின் பணிகளை பாராட்டி திருமதி ஷீலா அவர்களுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷிணி அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்வினை உலக சாதனை ஆய்வாளர் சித்ரா மை ஆய்வு செய்தார். தலைமை அதிகாரி கார்த்திக் குமார் முன்னிலை வகித்தார். சோசியல் ப்ரோட்டக்ஷன் அமைப்ப மற்றும் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமை வகித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

கடந்த 2012 முதல் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கவுரவித்து வரும் இந்த குழுவினர்,
பல்வேறு விமர்சனங்களை புறம் தள்ளி விட்டு மாபெரும் வெற்றியின் உச்சத்தை நோக்கி தற்போது லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நகர்கிறது.

விரைவில் உலக நாடுகளின் பாராட்டுகளை இந்த அமைப்பு பெறுவது உறுதி.
(வாழ்த்துக்களுடன்
யுகம் நியூஸ்-096 77 34 91 96)