குரோம்பேட்டை : எஸ்.பி.டி. இண்டர்நேஷனல் அச்சீவர்ஸ் அகாடமி சார்பில்
சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் சர்வதேச அளவில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பின் லோகோ வெளீயீடு அறிமுக விழா சென்னை குரோம் பேட்டையிலுள்ள பாலாஜி ரெசிடென்சியில் சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் முனைவர் கே.ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முனைவர்.ஜி.பத்மபிரியா, தமிழ்நாடு இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் என்.எம்.ஆர். மதன், பட தயாரிப்பாளர் வெள்ளை சேது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் உடற்பயிற்சி பயிற்றுநர் டேனியல் விக்டர், கிளாசிக் D3 எண்டர்டெயன் மெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் தினேஷ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யுவராஜ், எஸ்.ஏ.எஸ்.அமைப்பின் நிறுவனர் முனைவர் எஸ்.குமரன், டெல்லி திரைப்பட நடிகர் தர்மேந்திரா, சேவ் அண்ட் கேர் நிறுவனர் பவானி, மாயா ஈவன்ட்ஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கே.நகராஜன், தலைமை செயல் அதிகாரி ஜே.அனிதா, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஈரோடு சஞ்சய், ஏ.பி.ஜே.பிரண்ட்ஸ் மற்றும் பிரதர்ஸ் அமைப்பின் நிறுவனர் முனைவர் வி.ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கான தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவித்து வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பு சாதனையாளர்களை ஊக்குவிக்க தனித்துவத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக சமூக பணி செய்வதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் கலை, விளையாட்டு, இசை, நடனம் என தனி திறனை கொண்டோரை ஊக்குவித்து வருகிறது.

இதுவரை 5000 சாதனையாளர்களை கௌரவித்து இருக்கிறோம். இந்த லிங்கன் புக் இப் ரெக்கார்ட்ஸ் சர்வதேச அளவில் இயங்க உள்ளது.

மலேசியா ராக்ஸ்டார் மீடியா உள்ளிட்ட முக்கியமான பிரிதிநிதிகளோடு இணைந்து இயங்க உள்ளது” என தெரிவித்தார்.

இதில் சமூக பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாகிகளான ஹரி, விக்னேஷ்வரி, விஜய் ஜோஸ்வா, அன்சாரி உள்ளீட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ் விழா நிகழ்ச்சிகளை ஐஸ்வர்யா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இறுதியாக முனைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்களின் பிறந்த நாள் விழா தாய் தந்தை மற்றும் துணைவியார் முன்னிலையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவருக்கு பல்வேறு தரப்பினர் பொன்னாடை மற்றும் பூங்கொத்து, நினைவு பரிசு வழங்கினர்.