உலகில் முதல் முறையாக வாயை மூடிக்கொண்டு விசில் சத்தம் எழுப்பி உலக சாதனை படைத்த 7 வயது மாணவன் : அசாத்திய சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
குரோம்பேட்டை : திருப்பூர் பாண்டியபுரத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் மற்றும் புவனேஷ்வரி ஆகியோர்களின் 7 வயது மகன் எஸ்.பி. மெய்வர்ஷன் என்பவர் தனது வாயை மூடிக்கொண்டு விசில் சத்தம் எழுப்பி உலக சாதனை முயற்சி நடத்தும் நிகழ்வு குரோம்பேட்டையில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் 7 வயது உடைய மாணவன் தனது வாயை மூடியவாறு 12.04 நொடிகளில் விசில் அடித்து நிகழ்த்தி காட்டிய அசாத்திய சாதனையை உலக சாதனையாக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கிகரித்து சான்றிதழ் வழங்கி கெளரவித்தது.
இந்த நிகழ்வில் விங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் மாணவனுக்கு சான்றிதழ் வழங்கி மாணவனின் சாதனை அங்கீகரித்தார். தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அவர்கள் பதக்கம் அணிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பத்மபிரியா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மெய்வர்ஷனை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் செயல் அதிகாரிகள் ஹரிஹரன், இலக்கியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.