சென்னை:
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தி.நகர் காமராஜர் இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
துணைத் தலைவர் மாதேஷ்வரன் உடனிருந்தார்.
மேலும் ஒரு நிகழ்வாக பெரம்பூரில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் டிரஸ்டி சுரேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.