நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர்
கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்கு
மணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!
சிவகங்கை:
நாட்டுப்புற மரபிசை
கலையறிஞர்
தன்னானே இசை மேதை
கலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன் (கே.ஏ.ஜி) அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் மாரந்தை கிராமத்தில்
தாத்தா, அப்பத்தா, அம்மா, அப்பாவிடம் அன்பு தேடி உறங்கும் அண்ணனின் நினைவிடத்தில் போற்றி வணங்கி உன்னத உறவை நினைவோடு பார்த்து உடன்பிறந்த உறவுகள்
மண்ணின் கலை வளர்த்த கிராமத்தில் கூடுகை நடத்தி போற்றி வணங்குகிறோம்.

மேலும் இவரை பற்றி கே. ஏ. குணசேகரன் அவர்களின் தங்கை முனைவர் கே. ஏ. ஜோதி ராணி அவர் பெருமிதத்துடன் கூறியதாவது : நாட்டுப்புறக் கலைகளை பாடல்களின் மூலம்
முதன்முதலில் கல்விக்கள மேடைகளில்
நின்று இசைத்த நாட்டுப்புறக்கலை
அறிஞர் நாட்டுப்புற ஆட்டக்கலைகளின் காலடி வைப்பு முறைகளை முதன்முதலில் ஆராய்ச்சி செய்த கலை அறிஞர்.
நாட்டுப்புறக்கலைகளை கள ஆய்வு செய்து
முதன்முதலில் ராமநாதபுர மாவட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடம்
கலைமாமணி விருது பெற்றவர்.
உலகெங்கும் தமிழ் மண்ணின் பாடல்களை பறைசாற்றி வலம் வந்தவர்.
நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாழ்நாள் முழுதும் அர்ப்பணிப்போடு பாட்டுப்பயணம்
செய்தவர்.
வளருகின்ற இளம் தலைமுறையினர்தமிழ் மண்ணின் கலைகளை வளர்க்க வேண்டுமென கனவுகளைச் சுமந்து வயல்வரப்புக் காடுகளின்
கலைகளை வழிகாட்டி
மேடைகளில் பாட்டுக்கலைஞனாக பறையை முழக்கிய வரலாறு கே.ஏ.ஜி அவர்களுடையது என்பது மிகையாகாது.
தன் வெங்கலக் காந்த குரலால்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
என்று உரிமைக்குரலை
நாட்டுப்புறக்கலைஞர்களையும் இசைக்கச் சொல்லிக்
கொடுத்த போர்பறையிசைப்
போராளிக்கலைஞன்.
அவரது வளர்ப்பில்
இன்று எண்ணிலடங்கா நாட்டுப்புறக்கலைஞர்கள்
கே.ஏ.ஜி யைத் தவிர்த்து விட்டு கம்யூனிச இயக்க மேடைகள் நிறைவுறாது என்ற வரலாற்றை
நேர்மையின் மறு உருவம் தோழர் நல்லகண்ணு விரும்பிச் சொல்லும் வார்த்தைகள்
கே.ஏ.ஜி யின் இசை வரலாற்றில் பொறிக்கப்பட்ட மணிமகுடம்
கே.ஏ.ஜி யின் மேடையில் இணைந்து
நின்று பாடிய கலைமாணவர்களான
கலைமாமணிகள்
அவர்களுள் குறிப்பிடத்தக்க கலைமாமணி சிவகங்கை (சூராணம்) பாடகி சின்னப்பொண்ணு ,
கலைமாமணி பாண்டிச்சேரி
ஜெயமூர்த்தி
போன்றோர்
நாட்டுப்புறக் கலை களை வளர்க்கும் பணியைச் சுமந்து செல்லும் மாலுமிகளாக தொடர்ந்து வலம் வருகின்றனர்.
வழித்தோன்றல் கள்
அவர்களுக்கு
நன்றியும் மகிழ்ச்சியும்,
நாட்டுப்புறக் கலையறிஞர் கலைமாமணி டாக்டர்
கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு
மணிமண்டபம் அமைக்கும் அறக்கட்டளைப்
பணியில் கல்விக் கலையுலகம் இணைந்து செயல்பட வேண்டும்.
அப்பணிகளை
அவரது இசைவாரிசுகள்
முன்வரிசையில் நின்று
தமிழக அரசுக்கு
முன்மொழிய வேண்டும்.
நாட்டுப்புறக்கலைகளை வளர்த்த இசை வரலாற்று அறிஞரின் பிறந்தநாளான
(மே ,12,1955)
இன்று போற்றி வணங்குகின்றோம். மேலும் இவர் சனவரி, 01,2016 அன்று பாண்டிச்சேரியில் தனது இசை ஓட்டத்தை முடித்துக்கொண்டார்.
மண்ணின் மரபிசை கலைஞரின் வரலாறுகளை அருங்காட்சியகமாய் உருவாக்கும் பணியில் இணைந்திருக்கக் கோருகிறோம்…
மேலும் கலைமாமணி கே.ஏ.ஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட அவரது பிறந்த நாளில் உறுதியேற்போம் என
முனைவர் கே.ஏ.
ஜோதிராணி அவர்கள் நாட்டுப்புற இசை கலைஞர்கள் சார்பில் கேட்டுக்கொண்டார்.