சென்னை: உலக கடல்சார் தினத்தை முன்னிட்டு சென்னை:இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் கடல் வள பாதுகாப்பு, கப்பல் பாதுகாப்பு, மாலுமிகளின் சவால்கள் மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக மாலுமிகள் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சீஃபேரர்ஸ் கிளப் உள் அரங்கத்தில் இதன் தலைவர் முனைவர் ஏ.பாபுமைலன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதன் துணைத்தலைவர் முனைவர் ஜெசிலீன் அவர்கள் முன்னிலை வகித்தார். முனைவர் பி. ஆண்டனி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

கேப்டன் டேனியல் ஜே. ஜோசப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறையை சார்ந்தவர்களுக்கு விருது மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட முனைவர் ஆண்டனி அவர்களுக்கு உலக சமாதான தூதர் விருது மற்றும் அருட். சகோதரி அல்போன்ஸா அவர்களுக்கு வாழும் அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாலுமிகள், பயிற்சி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் திறளாக கலந்துகொண்டனர்.