அண்ணாநகர்:இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO), அபய் டான் டிரஸ்ட் மற்றும் நைட்பேர்ட் குளோபல் பவுண்டேஷன் இணைந்து உலக மண் தினம் விழிப்புணர்வு -உறுதிமொழி ஏற்பு மற்றும் மூங்கில் பல் தூரிகை அறிமுக விழா நிகழ்ச்சி ஜசிடபிள்யுஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் தலைமையில் அண்ணாநகர் தலைமை அலுவலகத்தில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு
மாநில மதிப்பீட்டுக்குழு நிபுணரும், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் உறுப்பினருமான முனைவர் ஜி. ஆனி ஜோஸ்பின் செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பிரமாண்டமான மூங்கில் பல் தூரிகை காட்சியை வெளியிட்டார்.

மேலும் அவர் பேசியபோது: மண்ணை நம்பி வாழும் நாம், மண் வளத்தை பாதுகாக்க பாடுபட வேண்டும், அரசின் வழிகாட்டுதலின்படி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும், ஐசிடபிள்யுஓ வின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த முயற்சியாகும்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட எ.வி.ஏ மாநில ஒருங்கிணைப்பாளர் நதர்ஷா மாலிம்.எச் அவர்கள் விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், மார் கிரிகோரியோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.சுதா ,உதவி பேராசிரியர் எல்.எஸ். சுக பிரியங்கா, செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ஹாஜிரா உள்ளிட்ட எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி, மார்க் கிரிகோரியோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூக பணித்துறை மாணவ-மாணவிகள், மனித கடத்தல் எதிர்ப்பு கிளப் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில்
அனைத்து பங்கேற்பாளர்ளுக்கும் இ-சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஐ.சி.டபிள்யூ.ஓ.வின் நிறுவன செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. மண் தினத்தை கொண்டாடுவது, மண் வளமானதாகவும், எதிர்கால சந்ததியினருக்கு வலுவாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. மண்ணைப் பாதுகாக்க மரங்களை நடவும், ரசாயனங்களுக்குப் பதிலாக கரிம உரங்களைப் பயன்படுத்தவும், கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் மாசுபாட்டைக் குறைக்கவும், மண் ஆரோக்கியத்தைப் பற்றி கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மண்ணை இயற்கையாக மேம்படுத்தவும், கரிம கழிவுகளை மறுசுழற்சி செய்யவும், மண்புழுக்களை ஊக்குவிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கரிமப் பொருட்களை வீணாக்காதீர்கள், உரம் தயாரிப்பதை நிறுத்தினால், மண் அதன் சத்துக்களை இழக்கும், 20 முதல் 30 ஆண்டுகளில் வெகுஜன பட்டினி தாக்கும் மற்றும் உணவுக்காக மக்கள் போராடுவார்கள், மண் மாசுபாட்டை புறக்கணிக்காதீர்கள்,மாசுபட்ட மண் புற்றுநோய், உறுப்பு செயலிழப்பு, நரம்பு கோளாறு, தோல் பிரச்சனைகள் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தும் விஷம் கலந்த பயிர்கள், ரசாயனங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம், மண்ணில் ரசாயனங்களை அதிகமாக பயன்படுத்தினால் இறுதியில் பயிர்கள் இல்லாத, விலங்குகள் இல்லாத, உணவு மற்றும் தண்ணீர் இல்லாத உலகத்திற்கு இட்டுச் செல்லும் நச்சுத்தன்மையை உருவாக்கும், நிலத்தை அதிகமாக விவசாயம் செய்யாதீர்கள்: நாம் அதிகமாக விவசாயம் செய்தால், சில ஆண்டுகளில் உணவு உற்பத்தி குறைந்து, மக்கள் நெருக்கடிக்கு வழிவகுக்கும், பசி, தாகம் உள்ளிட்டவைகளால் மரணங்கள் ஏற்படும்.
இந்த எச்சரிக்கைகளை நாம் புறக்கணித்தால், எதிர்கால சந்ததியினர் பசி, நோய் மற்றும் சுற்றுச்சூழல் சரிவுடன் இறக்கும் கிரகத்தை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.