நந்தனம் :நமது பாரத திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகம் மற்றும் தணிக்கை-II ஆணையரகம் சார்பில் சுதந்திரதின விழா
சென்னை நந்தனம் பெரியார் மாளிகையில் உள்ள சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆணையர் தசுதா கோகா IRS அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக GST கண்காணிப்பாளர் திருமதிஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஆணையர் பார்வையிட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர்கள் மனீஷ்காந்த் பனீக், ஜெயப்ரியா பெரியண்ணன் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.