திருவான்மியூர் :தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் இருந்து வருகின்றனர்.

அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் OMR மற்றும் ECRல் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கு அரிசி, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள், பேரிச்சம்பழம், டவல், குளிர்பானம், சோப்பு, டெட்டால், குளுக்கோஸ் உளுத்தம் பருப்பு, ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கபசூர சூரணம் பாக்கெட்டை நமக்காக தொலைக் காட்சி நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஷான்நவாஸ் கான் அவர்கள் வழங்கினார்.

IMJU சங்கத்தின் மாநிலத் தலைவர் மோகன் தாரா தலைமையில் மாநிலச் செயலாளர் சங்கர், இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன், பத்திரிகையாளர் பேராண்மை விமலேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.*

தங்கள் மீது அக்கறை கொண்டு தேடி வந்து நிவாரணம் வழங்கியதற்கு பத்திரிகையாளர்கள் நன்றியினை தெரிவித்தனர்.