தமிழ்த் திரையுலகில் நடிப்பு எழுத்து இசை மற்றும் பொது வாழ்வு என ,அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கி வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு Lincoln Book of Records உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் “இந்திய சினிமாவின் அடையாளம்” “ICON OF INDIAN CINEMA” என்கிற உயரிய விருது “லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் முனைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் அறிவிக்க, இயக்குனர் பாரதிராஜா அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.
https://youtu.be/VH2Q6_o4qxs
மேலும் இதில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் பத்மப்ரியா மற்றும் ஶ்ரீஜா, வேல்ஸ் நிர்வாகி சித்ரா மாய், சமூக ஆர்வலர் முரளிதரன் மற்றும் லிங்கன் உலக சாதனை நிர்வாகிகளான ஹரிஹரன், இலக்கியா ஆகியோர் கலந்து கொண்டு இயக்குனர். பாக்யராஜ் அவர்களை வாழ்த்தினர்.

மேலும் இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா, கலைஞானம்,நல்லி குப்புசாமி செட்டியார், கவிஞர் முத்து ராமலிங்கம் பார்த்திபன், பாண்டியராஜன்,சின்னி ஜெயந்த் இசையமைப்பாளர் தேவா, லிங்குசாமி, சரண், மயில்சாமி, கே. ராஜன், தம்பி ராமைய்யா, வேல்ஸ் ஐசரி கணேஷ்,எடிட்டர் மோகன், சீனு ராமசாமி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததனர்.
