பெங்களுர்:இந்திய அரசு
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் சார்பில்
நேரு இளைஞர் மையம்,
ஸ்வான் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்பு
ஸ்வர்ணமுகி மாத இதழ் மற்றும் இந்து சஞ்சே மாலை நாளிதழ் இணைந்து விருது வழங்கும் விழா நிகழ்வு கன்னட பவனாவில் உள்ள நயனா அரங்கத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய சுதந்திரத்தின் 78வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான பங்களிப்பிற்காக அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்தது.
மேலும் இந் நிகழ்வில் கலந்துக்கொண்ட சமூக சேவைக்காக 50க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்ற சமூக சேவகியும், ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளரும், மனித நேயருமான முனைவர் கண்ணகி அவர்களுக்கு சேவா சக்ரா புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.