கள்ளக்குறிச்சி:
இந்திய நாடு இந்தியருக்கே
இந்தியர்கள் அனைவருக்கும்
மூன்று வேளையும் தரமான உணவு,உடுத்த உடை, குடியிருக்க நல்ல உறைவிடம்,
தரமான இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம்,
தகுதிக்கேற்ப அரசு வேலை,
ஏற்றதாழ்வற்ற சமதர்ம சமுதாயம்,ஏழை, பணக்காரன் என்கிற பேதமில்லாது
அனைவரும் உழைக்க வேண்டும்,அனைவருக்கும் அரசே உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும்,
எட்டு மணி நேர வேலை,
எட்டு மணி நேர ஓய்வு,
எட்டு மணி நேர உறக்கம்
என்கிற உலக தொழிலாளர் விதிகள் நடைமுறைப்படுத்திட வேண்டும்,பிச்சைக் காரர்கள் இல்லாத நாடாக மாறிட இந்தியாவில்
தனிநபர் சொத்துடைமையை ரத்து செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்,அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும்மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில் நிறுவனங்கள், அனைத்து வேளாண் நிலங்கள்,
அரசுடமை ஆக்கப்படவேண்டும்.
இதன் காரணமாக
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும்,வேளாண் கூட்டுப் பண்ணைகள் உருவாக்க முடியும், இதன் மூலம்
தகுதிக்கேற்ப அனைவருக்கும் அரசு வேலைகள் வழங்கப்படும்,
தனிநபர் சொத்துடைமை ரத்து செய்ய படுவதால்
அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ சொத்து சேர்க்க லஞ்சம் வாங்கவோ ஊழல் செய்யவோ முடியாது.
இவைகளை நடைமுறைப்
படுத்த உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை கொண்டு வரவேண்டும்,
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் மட்டுமே மேற்கண்ட அனைத்தும் சாத்தியம், உழைப்பவர்கள் உணர வேண்டும்