சென்னை:உலக மனித அமைதி பல்கலைக்கழகம் (GLOBAL HUMAN PEACE UNIVERSITY) சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், நாடாளும் மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவருமான வ.தனலட்சுமி அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்காக மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.