சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி குழுமத்தின் தலைவர் பாரத சிக்ஸா ரத்னா டாக்டர் ரஜினி மற்றும் டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கோவை சி. சி. எம். ஏ. அரசு பள்ளி மற்றும் இ. எம். எஸ். சிலம்ப கலைக்கூடத்தின் மாணவியுமான அக்ஷயா அவர்களுக்கு
Global human peace universit y(virtual institute)என்கிற அமைப்பு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி
கௌவரப்படுத்தியது.
மேலும் இவர் சிலம்பத்தில் தேசிய அளவில் 2 முறை தங்க பதக்கம், சர்வ தேச அளவில் 1 முறை தங்க பதக்கம், ஆசிய அளவில் 1 முறை தங்க பதக்கம், 30 மாநில அளவிலான போட்டிகள், 20 மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியதுடன், சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இவரின் சாதனைக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்ற துணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.