சென்னை :
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடிக்கிடக்கும் நீதிமன்றங்களை திறக்கக்கோரி சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்
குற்றவியல் நீதிமன்றங்களை உடனே திறக்கக்கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எ.முகமது கவுஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
இந்த ஆர்ப்பாட்டத்தில்
வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆர்.கண்ணபிரான்,நிர்வாகிகளான எம்.அக்பர் பாஷா, என்.குமார்,
பி.எஸ்.சுகுமார்,ஏ.டி.கிஷோர் குமார், ஆர்.சரவணன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ராஜகோபால், ஜெயராமன் மற்றும் இளம் வழக்கறிஞர் ரஹ்மான் அலி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் தெரிவித்தனர்.