இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை
குரோம்பேட்டை :
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் மணிமாறன் மற்றும் தமிழ் செல்வி தம்பதியினர் இவர்களுடைய மகன் 4 வயது சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் என்பவர் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் பல்வேறு துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு உச்சரித்து உலக சாதனை முயற்சி படைக்கும் நிகழ்வு சென்னை குரோம்பேட்டையிலுள்ள லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
சிறுவனின் இந்த சாதனை முயற்சியை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் சான்றிதழ் வழங்கி அங்கீகரித்தார். தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் பதக்கம் அணிவித்தார். தலைமை நிர்வாக அதிகாரி செல்வம் உமா சாதனையை ஆய்வு செய்தார்.
மேலும் இந் நிகழ்வில் தலைமை செயலாளர் ஸ்டீபன் சீனிவாசன் மற்றும் சாலமோன் ஆகியோர் பரிசு உபகரணங்கள் வழங்கினர்.
ராணுவ அதிகாரியாக மாறி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என கூறிய சிறுவன் பிரிதிவிக் தேவ் வார்த்தைகள் அணைவருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந் நிகழ்வில் லீங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவன நிர்வாகிகளான ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் சிறுவன் எம். பிரிதிவிக் இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் தனது நன்றியை தனது மழலை சொல்லில் தெரிவித்தார்.