மயிலாப்பூர் : மே, 31
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் மாநில அளவிலான ஓவியப்போட்டி தென் சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் மைலாப்பூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மயிலாப்பூர் கைலாச புரம் குடிசைப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு மூன்றாயிரம், இரண்டாம் பரிசு 2000, மூன்றாம் பரிசு 1000 ரூபாய் என வழங்க உள்ளனர்.

மேலும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு தென் சென்னை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சையத் அகமது ஷா அவர்கள் குழந்தைகளை பாராட்டி பரிசுகளையும் இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
மார்ச் மாதத்தில் குழந்தைகள் கோடை விடுமுறையில் சந்தோஷமாகவும், குதூகலமாக விளையாடக்கூடிய காலக்கட்டத்தில் அவர்களை கொரோனா வீட்டில் முடக்கி விட்டது. அவர்களின் மனச் சோர்வையும், அவர்களின் படைப்பாற்றலையும் வெளிக்கொணர்வதற்காக தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, இந்த மாநில அளவிலான ஓவிய போட்டி இரண்டு அணிகளாக மாணவ, மாணவிகள் பிரிக்கப்பட்டு
நடத்தப்பட்டதாகவும், சிறந்த ஓவியங்களை ஆர்ட் கேலரி கண்காட்சிக்கு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தீயணைப்பு துறையினருக்கு அனைத்து வித பாதுகாப்பு உடைகளும் வழங்கப்படுவதாகவும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், முகக் கவசங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் தீயணைப்புத் துறை மூலமாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பேண்ட் வாத்தியம் விழிப்புணர்வு பாடல்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாகவும் குழந்தைகளுக்காக இந்த ஓவியப் போட்டி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமதாஸ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் வேளச்சேரி தீயணைப்பு நிலைய அலுவலர் பஞ்சவர்ணம் மற்றும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணுச்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.