சென்னை :கருணையின் வடிவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை நாளை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.‘உன் மீது நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக’ என்று மனிதநேயத்தின் மாண்பினையும், அன்பு செலுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்த இயேசுபிரான், சிலுவையில் அறையப்பட்ட பின்பு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவ பெரு மக்களால் கொண்டாடப்படுகிறது.
பகைவர்களையும் இரட்சிக்கும் பரந்த மனம் கொண்ட இயேசுபிரான், தம்மை சிலுவையில் அறைந்தவர்களை பார்த்து தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள், அவர்களை மன்னியும் என்று இறைவனிடம் வேண்டி தனது எல்லையில்லா இரக்க குணத்தை உலகத்தாருக்கு உணர்த்தினார்.அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்து காட்டிய இரட்சகர் இயேசு பிரானின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தற்போது உலகம் முழுவதும் சூழ்ந்துள்ள கொரோனா எனும் இருள் விலகி உலகம் முழுவதும் வெளிச்சம் பிறக்க நாம் அனைவரும் உடலால் தனித்திருந்து, உள்ளத்தால் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்பதை தெரிவித்து கொண்டு, கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.