இ.பி.எஸ்-95 (EPS- 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மணியோசை எழுப்பும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை:ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி இ.பி.எஸ்-95 (EPS- 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மணியோசை எழுப்பும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை, பழைய பேருந்து நிலையம்
கிட்டப்பா அங்காடி அருகில் EPS 95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் துணை தலைவர் மணிமாறன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதிவாணன், மாவட்ட துணைத் தலைவர்களான அம்பிகாபதி,
இராதா கிருஷ்ணன், இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் பரிமளகண்ணன்
வரவேற்புரை ஆற்றினார்.

இ.பி.எஸ் -95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
பண்ணை சொக்கலிங்கம்,
பன்னீர்செல்வம்,நடனசிகாமணி,ராமச்சந்திரன்,பாஸ்கர், பரமசிவம்,சிவப்பிரகாசம், அமர்சிங்,குணசேகரன், ராஜ்மோகன்,பிரித்திவிராஜ், துரைராஜ்,ஸ்ரீசைலன்,
ஆனந்தன்,கதிரவன்,
இராஜேந்திரன்,கமலநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான
கோரிக்கைகளான EPS 95 பென்சனர் அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் மாதம் 9000 பஞ்ச படியுடன்
வழங்க வேண்டும்,
EPS 95 பென்சனர் அனைவருக்கும் ESI மருத்துவ காப்பீட்டு வசதி வழங்க வேண்டும்,உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முறையாக அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரெயில்வே கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,ஆன்லைன் பதிவு திட்டத்தை கைவிட்டு, நேரடியாக மனுக்களை பெற்றிட வழிவகை செய்ய வேண்டும், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களின் EPS 95 பென்சன்தாரர்களுக்கு
வழங்குவது போல தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புடன் கூடிய தனி பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்டவைகள் முன்வைக்கப்பட்டன.

இறுதியில் கௌரவ தலைவர்
சம்பத் அவர்கள் நன்றியுரை நல்கினார்.