சென்னை:ஐஜிஹெச் ஃவுட் எண்டர்பிரைசஸ் (IGH wood Enterprises) சார்பில் சிகரம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை தியாகராய நகரில் உள்ள சர். சிட்டி தியாகராயர் கலையரங்கில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் நடிகர் சாந்தனு சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் முனைவர் முருகன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிகரம் விருதாளர் முனைவர் முருகன் பற்றிய ஓர் பார்வை:
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 2005 முதல் இன்று 2024 வரை பல்வேறு மனிதம் சார்ந்த சமூக சேவை பணியை சிறப்பாக செய்து கொண்டிருப்பதுடன், ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மளிகை பொருட்கள் அவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவற்றை முடிந்தவரை அவரது சொந்த வருமானம் மற்றும் நண்பர்கள் உதவியுடன் மாதம் தோறும் வாங்கிக் கொடுத்துக் சமூக நோக்குடன் உதவி புரிந்து வருகிறார்.

மேலும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை முன்னிட்டு ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு ஒரு வேலைக்கான உணவு வழங்கி அவர்களுடன் கொண்டாடுவதன் மூலம் அவர்களையும் சந்தோஷப்படுத்தி சந்தோஷம் அடையும் மிக உன்னதமான பணியை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்வுகளை வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பதிவுகளில் பதிவிடுவதன் மூலம் அதை பார்த்து பலரும் இவ்வகையில் கொண்டாட வேண்டும் என்று போடப்பட்ட அந்த தொகுப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததற்கு காரணம் ஐந்து பேர் மற்றும் உதவி செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் மற்றும் முருகன் அவர்கள் போட்ட பதிவின் மூலம் அதைப் பார்த்து தற்போது வரை 3000 பேருக்கும் மேற்பட்ட முன்பின் அறியாத புதிய நண்பர்கள் தங்களுடைய பிறந்தநாள் விழாக்களை இதே போல் ஆதரவற்ற இல்லங்களில் தேடிச்சென்று அவர்களுக்கு உணவளித்து கொண்டாடி மகிழ்வது பார்த்து மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் அடைந்து கொண்டிருப்பதுடன்
வாரத்தின் விடுமுறை நாட்களை ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுப்பது, முடி திருத்தம் செய்வது, கை மற்றும் கால் நகங்கள் சுத்தம் செய்து கட் செய்வது அவர்களுக்கு சேவிங் செய்வது, , உணவு ஊட்டுவது, படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு உடல் துடைத்து அவர்களுக்கு குளிப்பாட்டுவது என அவர்களுக்கு தேவையான சேவையை விடுமுறை நாட்களில் செய்து கொண்டிருப்பதுடன், சாலை ஓரங்களில் ஆதரவற்ற நிலையில் கேட்பாரற்று உள்ளவர்களை ஆதரவற்ற இல்லங்களுக்கு காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் கொண்டு போய் சேர்க்கும் பணியை செவ்வனே இன்று வரையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

முனைவர் ஆர். முருகன் அவர்களின்  சமூக சேவை பணி மேன் மேலும் தொடர யுகம் நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.